காஸாவில் போர் நிறுத்த அமெரிக்க அதிபரின் 20 அம்ச அமைதித் திட்டம்..!
சில அம்சங்களுக்கு ஹமாஸ் போராளிகள் ஒப்புதல்.....!!
டொனால்ட் டிரம்ப் வரவேற்பு....!!!
வாஷிங்டன், அக்.04- காஸா மீதான இஸ்ரேல் நடத்தி வரும் இரண்டு ஆண்டு இனப்படுகொலைப் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டரம்பின் 20 அம்ச அமைதித் திட்டிடத்தின் சில அம்சங்களை ஹமாஸ் போராளிகள் குழு ஏற்றுக் கொண்டு, மேலும் பேச்சுவார்தை மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளது.
20 அம்ச அமைதித் திட்டம் :
காஸாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரேல் இனப்படுகொலையை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். 64 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போய்விட்டனர். இத்தகைய சூழ்நிலையில் இஸ்ரேலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தின. உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து இஸ்ரேல் - ஹமாஸ் போராளிகள் குழுவினருக்கும் இடையே போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் மற்றும் இஸ்ரேல் பிரதமல் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடத்திய பேச்சுவார்தைக்குப் பிறகு 20 அம்ச அமைதித் திட்டத்தை டிரம்ப் அறிவித்தார். இதனை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். டிரம்ப்பின் இந்த அமைதி திட்டத்தை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வரவேற்றன.
ஹமாஸ் போராளிகள் ஒப்புதல் :
இந்நிலையில், போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தின் பல அம்சங்களை ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.ஆனால் திட்டத்தின் சில கூறுகள் மேலும் பேச்சுவார்த்தைகள் தேவை என்றும் அந்த குழு கூறியுள்ளது.
ஹமாஸ் போராளிகளின் இந்த அறிவிப்பை அதிபர் டிரம்ப் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் காஸா மீது குண்டுவீச்சு நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என தாம் இஸ்ரேலுக்கு கட்டளையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஹமாஸ் நீடித்த அமைதிக்கு தயாராக இருப்பதாக டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ஹமாஸின் பதிலைத் தொடர்ந்து டிரம்பின் காஸா திட்டத்தின் முதல் கட்டத்தை உடனடியாக செயல்படுத்த தயாராகி வருவதாகக் கூறிய பின்னர், காஸாவில் தாக்குதல் நடவடிக்கைகளைக் குறைக்க இராணுவத்திற்கு இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.
பிரதமர் மோடி வரவேற்பு :
இதனிடையே, காஸாவில் அமைதி கொண்டு வரும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பது பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார். இதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டு நடவடிக்கைகளை அவர் பாராட்டியுள்ளார். தமது சமூக வலைத்தளப்பதிவில் பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்கும் முடிவு, மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் ஒரு குறிப்பிட்டத்தக்க முன்னேற்றத்தை குறிக்கின்றன என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நியாயமான முறையில் அமைதியை நோக்கி எடுக்கப்படும் எந்த முடிவுகளுக்கும் இந்தியா தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
இதேபோன்று, ஹமாஸ் போராளிகளின் முடிவு உலகின் பல நாடுகள் வரவேற்றுள்ளன. விரைவில் காஸாவில் அமைதி திரும்ப வேண்டும் என்றும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
- சிறப்புச் செய்தியாளர் : எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
============================
No comments:
Post a Comment