" கேரளப் பெண்ணுக்கு காஸாவிலிருந்து கிடைத்த நன்றி "
இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்கு ஆளான காஸா பல்வேறு துயரங்களை நாள்தோறும் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கம் இஸ்ரேல் ராணுவத்தின் குண்டுவீச்சு, மறுபக்கம் பசி, பட்டினி, தாகம் என காஸா மக்கள் சந்தித்து வரும் துயரங்கள் கனத்த இதயத்தையும் வெடிக்கச் செய்துவிடும். காஸா மக்களுக்கு உலகின் பல்வேறு நாடுகள் உதவி செய்ய முன்வந்தாலும், அவற்றை தடுத்து நிறுத்திவிட்டு, காஸா மக்கள் கடும் இன்னல்களை தொடர்ந்து சந்திக்க வேண்டும் என இஸ்ரேல் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது.
இதனால், பசி, பட்டினி, நோய், தாகம் என பல்வேறு துயரங்களை காஸா மக்கள் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில், தெற்கு காஸாவின் புழுதி காற்று நிறைந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் அவசர தேவையாக தண்ணீர் இருந்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக தண்ணீர் குழாய்கள் உடைந்துவிட்டதால், காஸா மக்கள் தண்ணீர் கிடைக்காமல் நாள்தோறும் வேதனைகளை சுமந்துகொண்டே இருந்தார்கள். தண்ணீர் கிடைக்காமல் அவர்கள் அடையும் துன்பங்கள் ஏராளம். இந்த துயரங்களின் கதைகள் உலகத்தை எட்டிக் கொண்டே இருக்கிறது. எனினும் பலர் கண்டுகொள்ளாமல் இருந்து விடுகிறார்கள். பலர் மனதில் வேதனை அடைந்து காஸா மக்களுக்கு உதவ முடியவில்லையே என்று துயரம் கொள்கிறார்கள்.
கேரள பெண்ணின் மனிதநேயம் :
இத்தகைய சூழ்நிலையில், இந்தியாவின் கேரள மாநிலித்தைச் சேர்ந்த ஸ்ரீரேஷ்மி உதயகுமார் தண்ணீர் கிடைக்காமல் தவிக்கும் தெற்கு காஸா மக்களின் துயரங்களை அறிந்து மிகவும் வேதனை அடைந்தார். காஸா மக்கள் எந்த வகையிலாவது உடனே உதவ வேண்டும் என அவர் துடித்துக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு நேரமும் தாம் தண்ணீர் குடிக்கும்போது காஸா மக்களின் தாகம் தன்னுடைய மனக் கண் முன்வந்து சென்றுக் கொண்டே இருந்தது.
இதுகுறித்து தனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுடன் ஸ்ரீரேஷ்மி கலந்து ஆலோசித்தார். எப்படியாவது காஸா மக்களுக்கு தண்ணீர் அனுப்பி வைக்க வேண்டும் என்பது அவரது குறிக்கோளாக இருந்தது. தண்ணீரின் அருமை குறித்தும் அதன் தேவை குறித்தும், அது கிடைக்காமல் போனால் சந்திக்கும் துயரங்கள் குறித்து அவர் நிறைய அனுபவம் பெற்று இருந்தால், காஸா மக்களின் துயரங்களை உடனே போக்க வேண்டும் என நினைத்தார். அந்த நினைப்பு அவரை அமைதியாக இருக்க விடவில்லை. உடனே காஸா மக்களின் தண்ணீர் துயரத்தை போக்கும் நடவடிக்கைகளில் இறங்கினார்.
அதன்படி, சுமார் 250 பாலஸ்தீன் மக்களுக்கு வினியாகம் செய்ய 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் லாரியை அவர் ஏற்பாடு செய்தார். இதன்மூலம் தனது மனிதநேயத்தை ஸ்ரீரேஷ்மி உதயகுமார் அருமையாக வெளிப்படுத்தினார். இந்த 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் லாரி காஸா பகுதியை மக்களை சென்று அடைந்ததும் அந்த மக்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என்று கூறலாம்.
காஸாவிலிருந்து கிடைத்த நன்றி :
காஸா மக்களின் மீது மனிதநேயம் கொண்டு, கேரள பெண் ஸ்ரீரேஷ்மி உதயகுமார் செய்த இந்த உதவிக்கு காஸாவில் இருந்து அவருக்கு நன்றி கிடைத்து பாராட்டு கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. காணொளிகள் மூலம் ஸ்ரீரேஷ்மி உதயகுமார் தெற்கு காஸா மக்கள் நன்றி தெரிவித்து பாதாகைகள் மூலம் நன்றி வசகங்களை எழுதி மிகுந்த ஆனந்தம் அடைந்து இருக்கிறார்கள். இந்த காணொளிகளை கண்டு கேரள மக்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மக்களும் கூட வியப்பு அடைந்து ஸ்ரீரேஷ்மி உதயகுமாருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
ஸ்ரீரேஷ்மி உதயகுமார் அனுப்பி வைத்த 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் லாரி மட்டுமே, காஸா மக்களின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க முடியாது என்பது உண்மையாகும். எனினும், அவர் மேற்கொண்ட முயற்சி, காஸா மக்கள் மீது காட்டிய பரிவு, அன்பு அனைத்தும் மிகப்பெரிய நன்மை அளிக்கும் செயல் என்றே கூற வேண்டும். அந்த மனிதநேய சேவைக்காக ஸ்ரீரேஷ்மி உதயகுமார் யாரிடமும் நன்கொடை பெறவில்லை. வெறும் தனது மனிதநேயத்தை அழகிய செயல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். காஸா மக்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாழும் மனிதநேயம் கொண்ட மக்கள் கூட, ஸ்ரீரேஷ்மி உதயகுமாரின் அழகிய செயலை காணொளி மூலம் பார்த்து மகிழ்ச்சி அடைந்து அவரது செயலை பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
ஸ்ரீரேஷ்மி உதயகுமார் மகிழ்ச்சி :
காஸா மக்களுக்கு தாம் அனுப்பி வைத்த தண்ணீர் கேரளப் பெண்ணுக்கு காஸாவிலிருந்து நன்றி கிடைக்கும் தொடர்பான காணொளி காட்சிகளை காணும் போது கேரள மக்கள் மட்டுமல்ல, மனிதநேய உதவி செய்த ஸ்ரீரேஷ்மி உதயகுமாரும் மகிழ்ச்சி அடைந்து வருகிறார். ஒரு சிறிய உதவி உலக மக்களின் கவனத்தை எப்படி கவரும் என்பதற்கு கேரள பெண் ஸ்ரீரேஷ்மி உதயகுமார் ஒரு நல்ல உதாரணமாக இருந்து வருகிறார். காஸா மக்களின் துயரங்களை கண்டு அவர் அடைந்த வேதனை, அவரை வீட்டில் சும்மா அமர்ந்து கொள்ள வைக்கவில்லை. மாறாக தண்ணீர் இல்லாமல் துன்பம் அடையும் காஸா மக்களுக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்று நினைத்து அதை செயலிலும் காட்டியுள்ளார்.
காஸாவில் துன்பம் அடையும் மக்கள் அனைவரும் முஸ்லிம் மக்கள் ஆவார்கள். அப்படி இருந்தும், மத ரீதியாக சிந்திக்காமல், மனிதநேய சிந்தனை மூலம் தனது அழகிய செயலை வெளிப்படுத்தி ஸ்ரீரேஷ்மி உதயகுமார் உண்மையில் உலக மக்களுக்கு ஒரு அழகிய படிப்பினையை சொல்லித் தந்து இருக்கிறார். உலகில் யார் வேதனை அடைந்தாலும், துயரம் அடைந்தாலும் அவர்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும். மத ரீதியாக சிந்தித்து யாரும் உதவி செய்ய முன்வரக் கூடாது. இதைத் தான் இஸ்லாம் உதவி செய்வதில், மனிதநேயம் மட்டுமே கட்டாய வேண்டும் என்று அழகிய முறையில் சொல்லி வருகிறது. அதைத் தான் உலக முஸ்லிம்கள் தங்களுடைய வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறார்கள்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
No comments:
Post a Comment