Against Labours Code Protest..!
Congress Parliamentary party chairperson Mrs Sonia Gandhi ji, Leader of Opposition, Rajya Sabha Mr kharge ji, Leader of Opposition Mr Rahul Gandhi ji, Wayanad MP Mrs priyanka gandhi ji present...!
Against Labours Code Protest..!
Congress Parliamentary party chairperson Mrs Sonia Gandhi ji, Leader of Opposition, Rajya Sabha Mr kharge ji, Leader of Opposition Mr Rahul Gandhi ji, Wayanad MP Mrs priyanka gandhi ji present...!
" அஸ்ஸாமில் ஏழு இந்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய
மஸ்ஜித் இமாம் அப்துல் பாசித் "
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் அஸ்ஸாமில், தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் ஹேமந்தா பிஸ்வா சர்மா, அஸ்ஸாமில் வாழும் முஸ்லிம்களை எப்போதும் ஒருவித பதற்றத்தில் வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். மதரஸாக்கள் மூடல், பொது சிவில் சட்டம் என பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, முஸ்லிம்களை அடிக்கடி மிரட்டிக் கொண்டே இருக்கிறார். இதன் காரணமாக அஸ்ஸாமி முஸ்லிம்கள், நிம்மதியை இழந்து வருகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை எப்போதும் ஒருவித கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
எனினும், முஸ்லிம்கள் தங்கள் மாநிலம் அஸ்ஸாமில் வாழும் அனைத்து சமூக மக்களிடையே ஒற்றுமையுடன், அமைதியாக வாழ விரும்புகிறார்கள். மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும், பணிகளையும் அவர்கள் ஆற்றி வருகிறார்கள். பாஜக ஆட்சியாளர்களின் நெருக்கடிகளை கண்டு துவண்டு விடாமல், அவர்கள் ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து, அஸ்ஸாம் மற்றும் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். அதற்கு பல எடுத்துக்காட்டுகள் இருந்து வருகின்றன.
மத நல்லிணக்கம், மனிதநேயம் தொடர்பான பல சம்பங்கள் அஸ்ஸாமில் அவ்வவ்போது நடைபெற்று வருகின்றன. முஸ்லிம்கள் காட்டும் மனிதநேயம் பல நேரங்களில் வெளி உலகத்திற்கு வந்து சேருவதில்லை. அதையும் மீறி ஒருசில சம்பவங்களின் தகவல்கள் வெளியே வந்து, முஸ்லிம்களின் மனிதநேயம் எப்படிப்பட்ட அற்புதமான ஒரு நேயம் என்பதை இந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல், உலக மக்களுக்கும் எடுத்துக்காட்டி விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் அண்மையில் அஸ்ஸாமில் நடைபெற்று, பலரையும் வியப்புஅடையச் செய்துள்ளது.
இமாம் அப்துல் பாசித் :
வங்கதேச எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு அசாமில் உள்ள ஒரு நகரமான கரீம்கஞ்ச், அதன் ஆறுகள், குளங்கள் மற்றும் இறுக்கமான சுற்றுப்புறங்களுக்கு பெயர் பெற்றது. அங்கு மஸ்ஜித்துகள், கோயில்கள் மற்றும் சந்தைகள் பெரும்பாலும் ஒருவருக்கொருவர் நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளன. நிலம் பஜாரில் உள்ள மதரஸா ஜாமியா உல் உலூம் ஃபுர்கனாயா கரீம் கஞ்சின் ஆசிரியரும், போடோ படி ஜமா மஸ்ஜித்தின் இமாமுமான அப்துல் பாசித், கடந்த திங்கட்கிழமை (01.12.2025) அன்று அதிகாலை அமைதியின் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்தார். வீட்டிற்கு வெளியே வந்தபோது, அருகிலுள்ள குளத்தின் மேற்பரப்பிற்கு அடியில் ஒரு லேசான மின்னல் மின்னுவதைக் கண்டார். பல பயணிகளை ஏற்றிச் சென்ற கார் ஒன்று சாலையை விட்டு விலகி தண்ணீரில் மூழ்கியதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இமாம் பாசித், சம்பவத்தின் அவசரத்தை உணர்ந்து, மஸ்ஜித்தின் ஒலிபெருக்கி அமைப்புக்கு ஓடினார். இது பொதுவாக தொழுகைக்கான அழைப்புக்காக பாங்கு சொல்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தை எச்சரித்து தொழுகைக்காக அழைக்க ஒதுக்கப்பட்ட ஒலிபெருக்கி அமைப்புக்கு அருகே ஓடோடி சென்ற அவர், ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு நிலைமையின் தீவிரத்தை எடுத்துக் கூறி உடனே வரும்படி அழைப்பு விடுத்தார்.
இமாம் அப்துல் பாசித்தின் அழைப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த அங்குள்ள முழு முஸ்லிம் பகுதியிலிருந்தும் வந்த குடியிருப்பாளர்கள், சில நிமிடங்களில் குளத்திற்கு விரைந்தனர். உடனே குளத்தில் குதித்து, குளிர்ந்த நீரில் தத்தளித்த, காரின் ஜன்னல்களை உடைத்து, ஏழு பயணிகளை பாதுகாப்பாக இழுத்து உயிருடன் காப்பாற்றிய அவர்கள், பின்னர் வாகனம் முழுமையாக மூழ்கடித்தனர். காப்பாற்றப்பட்ட அனைவரும் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள்
இமாமிற்கு குவியும் பாராட்டுகள் :
தனத மனிதநேய செயல் குறித்து கருத்து கூறியுள்ள இமாம் அப்துல் பாசித், வீட்டிற்கு வெளியே வந்தபோது, "நான் தண்ணீருக்கு அடியில் காரின் விளக்குகளைக் கண்டேன், நாங்கள் உடனடியாக செயல்பட வேண்டும் என்பதை அறிந்தேன். உடனே மஸ்ஜித்தின் ஒலிபெருக்கி அமைப்புக்கு ஓடிச் சென்று, ஆற்றில் கார் மூழ்க்கிக் கொண்டிருக்கும் இந்த அறிவிப்பை வெளியிட்டேன். உடனே மக்கள் ஓடோடி வந்து அனைவரையும் உதவுமாறு கேட்டுக் கொண்டேன். என்னுடைய அழைப்பின் தீவிரத்தை உணர்ந்து கொண்டே மக்கள், உடனே சம்பவ இடத்திற்கு வந்து, மனிதநேயத்துடன் உதவியதுடன், காருடன் மூழ்க்கிக் கொண்டிருந்த 7 பயணிகளை உயிருடன் மீட்டனர்." இவ்வாறு தெரிவித்துள்ள இமாம் அப்துல் பாசித், தன்னுடைய மனிதநேய செயல் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
7 பயணிகளின் உயிரை, தனது விழிப்புணர்வு எச்சரிக்கை மூலம் காப்பாற்றிய இமாம் பாசித்தின் செயலை உள்ளூர்வாசிகள் பாராட்டி வருகின்றனர். இது மதங்களுக்கு இடையேயான ஒற்றுமைக்கு ஒரு சக்திவாய்ந்த எடுத்துக்காட்டு என்று அவர்கள் கூறியுள்ளனர். “இது மனிதநேயத்தின் உண்மையான செய்தி,” என்று உள்ளூர் மார்க்க அறிஞர் மௌலானா அப்துல் ஹபீஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் மீட்கப்பட்ட பயணிகள் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர் எடுத்துக்காட்டினார். இமாம் பாசித் அந்த அதிர்ச்சியான தருணத்தைப் பற்றி மட்டுமே யோசித்தார். மதத்தைப் பற்றியோ அல்லது வேறு எதையும் பற்றியோ அவர் சிந்திக்கவில்லை. உயிர்களைக் காப்பாற்றுவதே முன்னுரிமை என்ற அடிப்படையில் தனது பொறுப்பை உணர்ந்து உடனே செயல்பட்டார். அதன்மூலம் 7 இந்துக்களின் உயிர்கள் காப்பற்றப்பட்டன.
பாஜக தலைவரும் பாராட்டு :
அண்டை மாநிலமான திரிபுராவில் வசிக்கும் பயணிகள், அஸ்ஸாமின் சில்சார் மாவட்டத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பயணம் செய்த வாகனம், கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை தான் இமாம் அப்துல் பாசித், தனது விழிப்புணர்வு செயல்மூலம் காப்பாற்றி இருக்கிறார். மீட்புக்குப் பிறகு, உயிருடன் மீட்கப்பட்ட அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர தனி கார்கள் மற்றும் டாக்சிகளில் ஏறி திரிபுரா புறப்பட்டு சென்றனர்.
இமாம் அப்துல் பாசித்தின் மனிதநேய செயலை உள்ளூர்வாசிகள் மட்டுமல்லாமல், ஆளும் பாஜகவைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதியான இக்பாலும் பாராட்டியுள்ளார். இமாம் பாசித்தின் நடவடிக்கைகளைப் பாராட்ட நேரில் வருகை தந்த அவர், மிகுந்த மகிழ்ச்சியுடன் கட்டி அணைத்து தனது அன்பை வெளிப்படுத்தினார். இதேபோன்று, சிவில் போலீஸ் நிர்வாகம் இந்த சம்பவத்தைக் கவனித்து, இமாம் பாசித்துக்கு முறையாக வெகுமதி அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
சில நேரங்களில் வகுப்புவாத பதட்டங்கள் ஆழமாக இருக்கும் ஒரு பகுதியில், இமாம் பாசித்தின் விரைவான நடவடிக்கையும், இந்து சமூக உறுப்பினர்களைக் காப்பாற்ற முஸ்லிம் சமூகத்தின் கூட்டு முயற்சியும் ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தின் கட்டாய அடையாளமாக மாறியுள்ளது. முஸ்லிம்கள் குறித்தும், இஸ்லாம் குறித்தும் எப்போதும் தவறான கண்ணோட்டத்துடன் இருக்கும் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹேமந்தா பிஸ்வா சர்மா, இனியாவது முஸ்லிம்கள் மீது காட்டும் வெறுப்பு போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மீது அன்பைச் செலுத்த வேண்டும். அஸ்ஸாம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றும் பணிகளையும் பங்களிப்புகளையும் ஊக்குவித்து பாராட்ட வேண்டும்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்
A flawed, rigged SIR process has claimed over 20 lives, but the Modi government refuses to even have a discussion in Parliament about it!
We the INDIA bloc MPs protested against this at the Makar Dwar in Parliament House this morning.
INDIA bloc MPs protest in Parliament House complex demanding a discussion on Electoral Reforms SIR VoteChori
Congress Parliamentary party chairperson Mrs Sonia Gandhi ji, Congress President Mr Mallikarjun kharge ji, Leader of Opposition Mr RahulGandhi ji present …
The Class above First Class in flight...!
எப்படியெல்லாம் வசதி இருக்கிறது என்பதை கொஞ்சம் பாருங்க...!
"அழிவிலிருந்து உறுதியை நோக்கி: காஸா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பயணம்"
காஸாவின் கல்வி உள்கட்டமைப்பை அழித்த இஸ்ரேல் இனப்படுகொலைப் போரால் ஏற்பட்ட இரண்டு ஆண்டுகால கட்டாய மூடலுக்குப் பிறகு, காஸா இஸ்லாமிய பல்கலைக்கழகம் படிப்படியாக மீண்டும் நேரடி கற்றலுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது.
காஸாவில் பகுதியளவு பழுதுபார்க்கப்பட்ட, போரால் சேதமடைந்த பல்கலைக்கழகச் சுவர்களுக்கு மத்தியில், மாணவர்கள் வகுப்பறைகளுக்குள் மீண்டும் மகிழ்ச்சியுடன் நுழைந்துள்ளனர். அழிவு இருந்தபோதிலும் வாழ்க்கையை மீண்டும் உயிர்ப்பிக்கவும் கல்வியைத் தொடரவும் விரும்பும் காஸா மாணவ மாணவியர்களின் உறுதியைக் குறிக்கும் ஒரு காட்சி இது என்றே கூறலாம்.
இடப்பெயர்ச்சி, மின் தடை மற்றும் அழிக்கப்பட்ட வசதிகள் போன்ற நிலைமைகளின் கீழ் வரையறுக்கப்பட்ட ஆன்லைன் கற்பித்தல் மட்டுமே சாத்தியமான இரண்டு ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்குப் பிறகு, நவம்பர் 29ஆம் தேதி சனிக்கிழமை மீண்டும் பல்கலைக்கழகத் திறப்பு நடந்தது.
பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் முற்றிலும் அழிவு :
காஸா அரசாங்க ஊடக அலுவலகத்தின்படி, இஸ்ரேலிய தாக்குதல்கள், காஸாவில் உள்ள 165 பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை முற்றிலுமாக அழித்துவிட்டன. 392 கல்வி மையங்களை சேதப்படுத்தி, இந்தத் துறையை திறம்பட முடக்கியுள்ளன. இஸ்லாமிய பல்கலைக்கழக கட்டடங்களின் சில பகுதிகள் இன்னும் நூற்றுக்கணக்கான இடம்பெயர்ந்த காஸா குடும்பங்களுக்கு தங்குமிடம் அளிக்கின்றன. இதனால் பல்கலைக்கழக அதிகாரிகள் அவசர வீட்டுத் தீர்வுகளுக்கு அழைப்பு விடுக்கின்றனர்.
உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய காஸாவிற்கு சுமார் மூன்று லட்சம் கூடாரங்கள் மற்றும் முன் தயாரிக்கப்பட்ட வீட்டு அலகுகள் தேவை என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத் தலைவர் அசாத் யூசுப் அசாத், இஸ்லாமிய பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பதை "வரலாற்று சிறப்புமிக்க நாள்" என்று விவரித்துள்ளார். பாலஸ்தீனியர்கள் "வாழ்க்கையையும் கல்வியையும் விரும்புகிறார்கள்" என்று குறிப்பிட்டார். பல மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு மீண்டும் திரும்பி வந்துள்ளனர். நேரில் வகுப்புகளை முழுமையாக மீண்டும் தொடங்குவதற்கான ஒரு கட்ட திட்டத்துடன் மாணவர்கள் திரும்பி வந்து இருப்பது கல்வி மீது அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் மற்றும் கற்றல் மூலம் கிடைக்கும் புதிய வாழ்க்கை குறித்த சிந்தனைகளை எடுத்துக்காட்டும் வகையில் இருந்தது.
புதிய மாணவர்கள் வருகை :
இஸ்ரேலிய ராணுவம் நடத்திய இனப்படுகொலை காரணமாக காஸா முழுவதும் பரவலான அழிவு இருந்தபோதிலும், போரின் போது ஆன்லைன் கற்றல் மூலம் சுமார் நான்கு ஆயிரம் மாணவர்களை பல்கலைக்கழகம் பட்டம் பெற முடிந்தது. இப்போது, அக்டோபர் 2023 க்குப் பிறகு முதல் முறையாக, புதிய மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்கு வந்து வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள். கல்வி கற்ற திரும்பி வருவதில் மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மருத்துவ மாணவர் மலாக் மொகாயத் கூறினார்: "போருக்குப் பிறகு இன்று (29.11.2025) வகுப்பிற்கு திரும்பும் முதல் நாள். நெரிசல் மற்றும் சேதம் இருந்தபோதிலும், கல்வி தொடர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." "தாக்குதல்கள் இருந்தபோதிலும், நாங்கள் வகுப்புகளுக்குச் செல்கிறோம். இடிபாடுகளில் இருந்து எழுந்த பல்கலைக்கழகத்தைப் பற்றி பெருமைப்படுகிறோம்." என்று மற்றொரு மாணவர் சாமா ராசி கூறினார்.
இப்படி காஸா முழுவதும் மாணவர்கள் தங்களுடைய கல்வியை கற்க ஆவலுடன் இருப்பதை காண முடிகிறது. இஸ்லாமிய வாழ்க்கை முறை என்பது, கல்வியை அடிப்படையாக கொண்ட ஒரு அழகிய முறை என்பதால், பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் கூட, காஸா மாணவர்கள், கல்வியின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். இதன் காரணமாக தான், காஸா இஸ்லாமியப் பல்கலைக்கழகம் மீண்டும் திறந்தபோது, மாணவர்கள் மட்டுமல்லாமல், மாணவிகளும், ஆர்வத்துடன் பல்கலைக்கழகத்திற்குள் ஆர்வத்துடன் நுழைந்தனர்.
வாழ்க்கையையும் கல்வியையும் விரும்பும் மாணவர்கள் :
கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களுடைய கல்வி தடைப்பட்ட போதும், காஸா மாணவர்கள், ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. அதற்கு முக்கிய காரணம், ஏக இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து இஸ்லாமிய வாழ்க்கையை வாழும் அவர்கள், வாழ்க்கையை மட்டும் விரும்பவில்லை. கல்வியையும் விரும்புகிறார்கள். இதன் காரணமாக தான், போர் நடைபெற்ற போதிலும் ஆன்லைன் மூலம் அவர்கள் கல்வியை தேடினார்கள். நல்ல பயனுள்ள கல்வியை கற்றார்கள்.
இஸ்லாம் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவதை நன்கு உணர்ந்து இருக்கும் காஸா மக்கள், தங்களுடைய பிள்ளைகள் கல்வி கற்பதை நிறுத்தக் கூடாது என்ற உறுதியுடன் இருந்து வருவதால், போர் காலத்தில் தடைப்பட்ட கல்வியை மீண்டும் பெற வேண்டும் என விரும்பி, அதற்கான வழிகளை தேடுகிறார்கள். தற்போது காஸா இஸ்லாமிய பல்லைக்கழகம் திறந்து, கல்வி தேடலுக்கு ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது. இது காஸா மாணவ மாணவியர்களின் கல்வி தாகத்திற்கு ஒரு நல்ல வழியை நிச்சயம் ஏற்படுத்தும். உலக அளவில் காஸா மாணவர்கள் நிச்சயம் சாதிப்பார்கள் என்பது அவர்களின் கல்வி ஆர்வம் மூலம் உறுதியாக தெரிய வருகிறது.
காஸாவின் மறுகட்டமைப்பு :
அக்டோபர் 10 ஆம் தேதி தொடங்கிய ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம், அக்டோபர் 8, 2023 அன்று தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவந்த நிலையில், மீண்டும் இஸ்லாமிய பல்கலைக்கழகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த இஸ்ரேலிய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அத்துடன் ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் பேர் காயமடைந்தனர். பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளானார்கள்.
தற்போது போர் முடிவுக்கு வந்தபோதிலும் காஸா மக்களின் துயரங்கள் இன்னும் முழுமையாக தீரவில்லை. காஸாவின் மறுகட்டமைப்பு செலவு சுமார் 70 பில்லியன் அமெரிக்க டாலர் என ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிடுகிறது. ஏக இறைவன் விரும்பினால், 100 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி கூட காஸா மக்களுக்கு நிச்சயம் கிடைத்துவிடும். நம்பிக்கை தான் வாழ்க்கை என்பதை காஸா மக்களின் உறுதிப்பாட்டின் மூலம் இதனை இஸ்லாமியர்கள் உணர்ந்துகொள்ளலாம்.
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்