Friday, December 26, 2025

சிறை....!

 மிஸ் பண்ணாதிங்க....!

இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கிய சிறை திரைப்படம், ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தி, பல இடங்களில் கண்ணீரை வரவழைத்து, நம்மையும் படத்தோடு ஒன்றி வைத்து விடுத்துகிறது.

விக்ரம் பிரபு சொன்னபடி ஒரு நல்ல படம் தமிழில் மீண்டும் வந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

முஸ்லிம் விசாரணை சிறை கைதியாக நடித்துள்ள எல்.கே.அக்‌ஷய்குமார் தனது இயல்பான நடிப்பில் ரசிகர்களின் இதயத்தை தொட்டு அழ வைத்து விடுகிறார்.

அனிஷ்மா அனில்குமாரின் நடிப்பு சிறப்பு.

தமிழ் எழுதிய கதைக்கு அருமையான திரைக்கதை மூலம் ஒரு நல்ல படத்தை இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி தமிழ் சினிமாவுக்கு தந்து இருக்கிறார்.

பல இடங்களில் வசனங்கள் தூள் ரகம்.

சிறை உடனே பார்க்க வேண்டிய திரைப்படம். விருதும் வழங்கப்பட வேண்டிய தமிழ் திரைப்படம்.

சிறை படக்குழுவினருக்கு எமது பாராட்டுகள்.

- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ்

No comments: