" வக்பைக் காப்பாற்றுங்கள் அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்"
என்ற கொள்கை முழக்கத்தின் கீழ் வக்பு சொத்துகளை உமீத் இணையதளத்தில் பதிவு செய்ய ஒன்றிணைத்து செயல்பட வேண்டும்...!
அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தமிழ்நாடு அழைப்பு....!
சென்னை, டிச.30-வக்பு சொத்துகளை உமீத் இணையதளத்தில் பதிவு செய்ய அனைத்து முஸ்லிம் இயக்கங்கள், அமைப்புகள், ஜமாஅத் நிர்வாகிகள், இளைஞர்கள், மாணவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தமிழ்நாடு கிளை அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் வக்பு சொத்துகளை உமீத் தளத்தில் பதிவு செய்ய அடுத்த ஆண்டு ஜுன் 6ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டித்து ஒன்றிய அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் அண்மையில் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டது. இத்தகைய சூழ்நிலையில் தமிழகத்தில் உள்ள வக்பு சொத்துகளில் 25 ஆயிரம் சொத்துகள் உமீத் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் உள்ள 3 ஆயிரத்து 400 வக்பு நிறுவனங்களின் கீழ் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வக்பு சொத்துகள் இன்னும் உமீத் தளத்தில் பதிவு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது. வக்பு சொத்துகள் பதிவு செய்வது தொடர்பாக மஹல்லா ஜமாஅத் முத்தவல்லிகளுக்கு பதிவு செய்வது தொடர்பாக சரியான விவரங்கள் தெரியாமல் இருப்பதால் அவர்கள் மெத்தனமாக இருந்து வருகிறார்கள்.
ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு :
இந்நிலையில் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் தமிழ்நாடு கிளை, வக்பு சொத்துகளை உமீத் தளத்தில் பதிவு செய்ய ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது. அதன்படி, வக்பைக் காப்பாற்றுங்கள், அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள் என்ற கொள்கை முழுக்கத்தின் கீழ் வக்பு சொத்துகளை உமீத் தளத்தில் பதிவு செய்ய அனைவரும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு கிளையின் ஒருங்கிணைப்பாளர் இப்னு சவூத் இணை ஒருங்கிணைப்பாளர்கள் பாத்திமா முசப்பர், மவுலானா ஜபருல்லாஹ் ரஹ்மானி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், வக்பு சொத்துகளை உமீத் தளத்தில் பதிவு செய்ய கால அவசாகம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வக்பு சொத்துகளையும் உமீத் தளத்தில் பதிவு செய்ய அனைவரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், உமீத் போர்ட்டலில் வக்பு சொத்துகளை பதிவேற்றம் செய்வதற்கும், இதுவரை பதிவு செய்யப்படாமல் இருக்கும் வக்பு சொத்துகளை கண்டறிந்து பதிவு செய்வதற்குமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிக்காக தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை மாவட்ட ரீதியாக ஒன்றிணைத்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. ஆகையால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்கள், மஹல்லா ஜமாஅத்தை சார்ந்த இளைஞர்கள் இந்த முக்கிய பணியில் பங்கேற்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர் நியமனம் :
இந்த பணியில் ஒருங்கிணைந்து செயல்பட முன்வரும் இளைஞர்கள், மாணவர்கள் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் கே.அம்ஜத் கான் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் அவரது செல்பேசி எண் 80155 16601 எண்ணில் தொடர் கொண்டு, ஆர்வம் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் தங்களது பெயர்களை பதிவு செய்துகொண்டு, ஒன்றிணைந்து செயல் வேண்டும் என்றும் அத்துடன் இங்கே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் விண்ணப்பம் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfmBUB1PSnDnVWih8jivtS5NVbPZA5R1QFVhXy-AasbORkl0Q/viewform
- எஸ்.ஏ.அப்துல் அஜீஸ், சிறப்புச் செய்தியாளர்
=======================


No comments:
Post a Comment