Wednesday, December 3, 2025

வானிலை....!

 நாள்: 03-12-2025 நேரம்:13:30 மணி

தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:  

         தமிழத்தில்  வடகிழக்கு பருவமழை தீவிரமாக  இருந்தது. 

தமிழகத்தில் அநேக இடங்களில் (வடதமிழக கடலோரப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும்,   தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும்), புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  மழை பெய்துள்ளது. 

பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  

மண்டலம் 01  எண்ணூர் (சென்னை), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு) தலா 15, 

சேத்துப்பட்டு (திருவண்ணாமலை) தலா 13, 

திருமயம் (புதுக்கோட்டை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) தலா 12, 

சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), மண்டலம் 02 மணலி புதுநகரம்  (சென்னை), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), திருவாரூர் (திருவாரூர்), குடிமியான்மலை (புதுக்கோட்டை), இலுப்பூர் (புதுக்கோட்டை) தலா 11, 

மகாபலிபுரம் (செங்கல்பட்டு), வடகுத்து (கடலூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), செங்குன்றம் (திருவள்ளூர்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) தலா 10, 

தொண்டி (ராமநாதபுரம்), பொன்னேரி (திருவள்ளூர்), திருவாரூர் AWS (திருவாரூர்), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), அம்பத்தூர் (Rev) (திருவள்ளூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), சோழவரம் (திருவள்ளூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), பாகூர்  (புதுச்சேரி) தலா 9, 

NIOT_பள்ளிக்கரணை ARG (சென்னை), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மண்டலம் 02 D15 மணலி (சென்னை), நீடாமங்கலம் (திருவாரூர்), RSCL வல்லம் (விழுப்புரம்) தலா 8, 

மன்னார்குடி (திருவாரூர்), ராணிப்பேட்டை AWS (ராணிப்பேட்டை), ஆவடி (திருவள்ளூர்), செய்யார் ARG (திருவண்ணாமலை), காரைக்கால் (காரைக்கால்), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), சோழிங்கநல்லூர் (சென்னை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), விருதாச்சலம் (கடலூர்), SCS மில் திருவெண்ணெய்நல்லூர் (விழுப்புரம்), நெய்வேலி AWS (கடலூர்) தலா 7, 

அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), குப்பநத்தம் (கடலூர்), பெரியபட்டி (மதுரை), மேட்டுப்பட்டி (மதுரை), காரைக்கால் AWS (காரைக்கால்), திருவள்ளூர் (திருவள்ளூர்), செய்யார் (திருவண்ணாமலை), பாண்டவரடி  (திருவாரூர்), டிஜிபி அலுவலகம் (சென்னை), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), மண்டலம் 14  மடிப்பாக்கம்  (சென்னை), RSCL அரசூர் (விழுப்புரம்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), விருத்தாசலம் ARG (கடலூர்) தலா 6, 

வாடிப்பட்டி (மதுரை) 6, வேப்பூர் (கடலூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), சிங்கம்புணரி (சிவகங்கை), ஜெயா பொறியியல் கல்லூரி AWS (திருவள்ளூர்), கடலூர் (கடலூர்), சென்னை (N) AWS (சென்னை), மதுக்கூர் (தஞ்சாவூர்), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), காட்டுமயிலூர் (கடலூர்), பூண்டி (திருவள்ளூர்), தென்காசி (தென்காசி), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), மண்டலம் 11 U32 மதுரவாயல் (சென்னை), காரைக்குடி (சிவகங்கை), காரையூர் (புதுக்கோட்டை), மண்டலம் 14 பெருங்குடி (சென்னை), புலிப்பட்டி (மதுரை) தலா 5, 

ஆண்டிபட்டி (தேனி), பூந்தமல்லி (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), சிதம்பரம் (கடலூர்), புழல் ARG (திருவள்ளூர்), கீரனூர் (புதுக்கோட்டை), கல்லந்திரி (மதுரை), ஆண்டிபட்டி (மதுரை), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), கரம்பக்குடி (புதுக்கோட்டை), திருப்பத்தூர் (சிவகங்கை), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), உடையாளிபட்டி (புதுக்கோட்டை), அரிமளம் (புதுக்கோட்டை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), மண்டலம் 13  வேளச்சேரி  (சென்னை), தானியமங்கலம் (மதுரை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), வனமாதேவி (கடலூர்), ACSமருத்துவக்கல்லூரி ARG (காஞ்சிபுரம்), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), எம்ஜிஆர் நகர் (சென்னை), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) தலா 4, 

ஒரத்தநாடு (தஞ்சாவூர்), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), குருங்குளம் (தஞ்சாவூர்), நன்னிலம் (திருவாரூர்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), SCS மில் பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), கிளானிலை (புதுக்கோட்டை), YMCA நந்தனம் ARG (சென்னை), சிட்டம்பட்டி (மதுரை), சேத்தியாத்தோப்பு (கடலூர்), தரமணி ARG (சென்னை), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), கீழச்செருவை (கடலூர்), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), DSCL தியாகதுர்க்கம் (கள்ளக்குறிச்சி), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), அண்ணாமலை நகர் (கடலூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), பெரியகுளம் PTO (தேனி), கொத்தவாச்சேரி (கடலூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), மீனம்பாக்கம் AWS (சென்னை), ஆலந்தூர் (சென்னை), சென்னை விமானநிலையம்  (சென்னை), SRC குடிதாங்கி (கடலூர்), விழுப்புரம் (விழுப்புரம்), சோழவந்தான் (மதுரை), கொரட்டூர் (திருவள்ளூர்), வைகை அணை (தேனி), சிதம்பரம் AWS (கடலூர்), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), தென்காசி AWS (தென்காசி), பெலாந்துறை (கடலூர்), மீ மாத்தூர் (கடலூர்), கொளப்பாக்கம் ARG (செங்கல்பட்டு), மதுரை விமானநிலையம்  (மதுரை), கலவை AWS (ராணிப்பேட்டை), அரக்கோணம் (ராணிப்பேட்டை), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), நத்தம் (திண்டுக்கல்), சாத்தியார் (மதுரை), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), BASL முகையூர் (விழுப்புரம்), ஆரணி (திருவண்ணாமலை), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), ராஜபாளையம் (விருதுநகர்) தலா 3, 

தஞ்சாவூர் (தஞ்சாவூர்), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), லால்பேட்டை (கடலூர்), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), பண்ருட்டி (கடலூர்), குறிஞ்சிப்பாடி (கடலூர்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), பாலமோர் (கன்னியாகுமரி), செஞ்சி (விழுப்புரம்), திருப்போரூர் (செங்கல்பட்டு), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), புவனகிரி (கடலூர்), திருச்சுழி (விருதுநகர்), திருத்தணி (திருவள்ளூர்), புதுச்சேரி (புதுச்சேரி), ஆற்காடு (ராணிப்பேட்டை), அகரம் சீகூர் (பெரம்பலூர்), திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), DSCL விருகாவூர் (கள்ளக்குறிச்சி), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), பரங்கிப்பேட்டை (கடலூர்), மதுரை வடக்கு (மதுரை), மதுரை நகரம் (மதுரை), வாலாஜா (ராணிப்பேட்டை), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), DSCL மடம்பூண்டி (கள்ளக்குறிச்சி), புதுச்சேரி AWS (புதுச்சேரி), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), நாகப்பட்டினம் AWS (நாகப்பட்டினம்), புதுச்சேரி டவுன்  (புதுச்சேரி), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), சோத்துப்பாறை (தேனி), மண்டலம் 12 D156 முகலிவாக்கம் (சென்னை), கொள்ளிடம் (மயிலாடுதுறை), நிலக்கோட்டை (திண்டுக்கல்), கொடவாசல் (திருவாரூர்), கே.எம்.கோயில் (கடலூர்), DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), அரண்மனைப்புதூர் (தேனி), எழுமலை (மதுரை), சீர்காழி (மயிலாடுதுறை), செம்பரம்பாக்கம்-REV (திருவள்ளூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), தல்லாகுளம் (மதுரை), நிலக்கோட்டை ARG (திண்டுக்கல்), ஆழியார் (கோயம்புத்தூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்) தலா 2, 

செய்யூர் ARG (செங்கல்பட்டு), பேராவூரணி (தஞ்சாவூர்), கோடிவேரி (ஈரோடு), சிற்றாறு-I (கன்னியாகுமரி), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), RSCL-2 கெடார் (விழுப்புரம்), TNAU கோயம்புத்தூர் (கோயம்புத்தூர்), வல்லம் (தஞ்சாவூர்), மலையூர் (புதுக்கோட்டை), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), திருத்தணி PTO (திருவள்ளூர்), கிளன்மார்கன் (நீலகிரி), காரியாப்பட்டி (விருதுநகர்), மதுரை AWS (மதுரை), போளூர் (திருவண்ணாமலை), லக்கூர் (கடலூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), வீரகனூர் (சேலம்), வி.களத்தூர் (பெரம்பலூர்), கின்னக்கோரை (நீலகிரி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), திண்டுக்கல் (திண்டுக்கல்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), பொன்னமராவதி (புதுக்கோட்டை), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), DSCL திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி), தேவகோட்டை (சிவகங்கை), திருக்குவளை (நாகப்பட்டினம்), பெருங்களூர் (புதுக்கோட்டை), ராணிப்பேட்டை (ராணிப்பேட்டை), KCS மில்-2 கச்சிராப்பாளையம் (கள்ளக்குறிச்சி), கன்னடயன் அணைக்கட்டு (திருநெல்வேலி), எச்சன்விடுதி (தஞ்சாவூர்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), ஆண்டிமடம் தாலுகா அலுவலகம் (அரியலூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), வேப்பந்தட்டை ARG (பெரம்பலூர்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி), குப்பணம்பட்டி (மதுரை), மதுக்கரை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), மடத்துக்குளம் (திருப்பூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), விரகனூர் அணை (மதுரை), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), கெத்தை (நீலகிரி), கோத்தகிரி (நீலகிரி), KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), நந்தியாறு (திருச்சிராப்பள்ளி), மணல்மேடு (மயிலாடுதுறை), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), பத்துக்கண்ணு  (புதுச்சேரி), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), திருமூர்த்தி அணை (திருப்பூர்), திருமூர்த்தி IB (திருப்பூர்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), கோவிலங்குளம் (விருதுநகர்) தலா 1.

வெப்பநிலை நிலவரம்:  

அதிகபட்ச வெப்பநிலை :-  

அதிகபட்ச வெப்பநிலை : ஈரோடு :-  34.6° செல்சியஸ்

குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- மதுரை (நகரம்):  21.4° செல்சியஸ்

                                                                                                                                                                               அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறவிப்பு மற்றும் எச்சரிக்கை: 

நேற்று (02-12-2025) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் - வடதமிழகம் - புதுவை  - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில், நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து,  இன்று (03-12-2025) காலை 0530 மணி அளவில், வடதமிழக – புதுவை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறைந்து, காலை 0830 மணி அளவில்,   அதே பகுதிகளில் நிலவுகிறது.  இது, அடுத்த 24 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுக்குறையக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல்  ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

03-12-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அவ்வப்பொழுது பலத்த தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

04-12-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

 05-12-2025: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

 06-12-2025 முதல் 09-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு: 

இன்று (03-12-2025): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.  பொதுவாக வெப்பநிலை 24-26° செல்சியஸை ஒட்டி  இருக்கக்கூடும்.

நாளை (04-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:   

தமிழக கடலோரப்பகுதிகள்:  

03-12-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

04-12-2025 முதல் 07-12-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள்:

03-12-2025: தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தென்மேற்கு  மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு  வங்கக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

04-12-2025 முதல் 07-12-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

அரபிக்கடல் பகுதிகள்:

03-12-2025: தெற்குகேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

04-12-2025: லட்சத்தீவு பகுதிகள் மற்றும் கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

05-12-2025 முதல் 07-12-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.

மேலும் விவரங்களுக்கு:  mausam.imd.gov.in/chennai   இணையதளத்தை காணவும்.

 பா. செந்தாமரை கண்ணன்

 விஞ்ஞானி - F

 தென் மண்டல தலைவருக்காக

 மண்டல வானிலை ஆய்வு மையம்,

 சென்னை, தமிழ்நாடு.



No comments: