Thursday, August 15, 2024

78வது சுதந்திர விழா கோலாக்கலம்...!

 

.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைமை அலுவலகம் காயிதே மில்லத் மன்ஸிலில் நாட்டின் 78வது சுதந்திர விழா கோலாக்கலம்...! 


தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் காதர் மொகிதீன்

தேசிய கொடியை ஏற்றி வீர உரை 

சுதந்திரத்திற்கு தியாகம் செய்த முஸ்லிம் போராட்ட தியாகிகளுக்கு

.யூ.முஸ்லிம் லீக் சார்பில் இனி விருது வழங்கப்படும் என்று அறிவிப்பு

சென்னை, ஆக.16-நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் உள்ள .யூ.முஸ்லிம் லீக் தேசிய அலுவலகமான காயிதே மில்லத் மன்ஸிலில், நாட்டின் மூவர்ண கொடியை ஏற்றும் விழா நேற்று (15.08.24) அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய கொடியை ஏற்றி, சிறப்புரையாற்றினார்.

வரவேற்புரை அபூபக்கர்:

விழாவில் மாநில துணைச் செயலாளர் எஸ்..இப்ராஹிம் மக்கீ கிராத் ஒதினார். பின்னர் மாநில பொதுச் செயலாளர் கே.எம்..முஹம்மது அபூபக்கர் விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார். அப்போது, சுதந்திர மற்றும் குடியரசு தின நாட்களில் .யூ.முஸ்லிம் லீக் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கொடியை ஏற்றுவது வழக்கமாக இருக்கிறது என  அவர் குறிப்பிட்டார். நாட்டின் சுதந்திரத்திற்காக முஸ்லிம் சமுதாயம் ஆற்றிய பணிகள் மற்றும் தியாகங்களையும் அவர் மேற்கோள் காட்டினார். அத்துடன், முஸ்லிம்களுக்கு எதிராக தேவையில்லாமல் ஒன்றிய ஆட்சியாளர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாகவும் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா அதில் ஒன்றும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால், இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை ஒருபோதும் வீழ்ச்சி அடையச் செய்ய முடியாது என்றும் பெரும்பான்மை பலம் இல்லாமல் மோடி அரசு செய்துவரும் அனைத்து பிரச்சினைகளையும் சமுதாயம் சட்ட ரீதியாக எதிர்கொண்டு முறியடிக்கும் என்றும் அபூபக்கர் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் வயநாடு பேரிடர் நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

தேசிய தலைவர் உரை:

 

இதைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்ற தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர்,  .யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர நாள் மற்றும் குடியரசு தினம் ஆகிய விழாக்களில் நாட்டின் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வருகிறோம். அதை வழக்கமாக செய்துவரும் நாம், அந்த வகையில் இந்தாண்டும், இன்று தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டி வருகிறோம். 78வது சுதந்திர தின விழா நாட்டில் மட்டுமல்ல, இந்திய முஸ்லிம்களின் குடும்பங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. .யூ.முஸ்லிம் லீக் அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு, கொண்டாடப்படுகிறது.

உலகில் உள்ள பிற நாடுகளுக்கு இல்லாத பெருமை இந்தியாவிற்கு மட்டுமே உண்டு. இந்தியாவில் மொத்தம் 4 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட சமூகங்கள் வாழ்ந்து வருகின்றன. இதுபோன்ற ஒரு நிலை உலகில் உள்ள 193 நாடுகளில் இல்லை. ஐக்கிய நாடுகள் சபை புள்ளிவிவரத்தின்படி, 193 நாடுகளில் 57 நாடுகள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளாக உள்ளன. மற்ற நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையின மக்களாக இருந்து வருகிறார்கள்.

முஸ்லிம்களின் தியாகங்கள்:

இந்தியாவில் 142 கோடி பேர் இருக்கும் நிலையில், அவர்களில் சுமார் 25 கோடி பேர் முஸ்லிம்கள் ஆவார்கள். இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் நாட்டிற்காக பல்வேறு தியாகங்களை செய்து வருகிறார்கள். அந்நியர்களிடம் இருந்து நாட்டின் எல்லையை பாதுகாத்து வருகிறார்கள். இந்திய முஸ்லிம் சமுதாயம் தங்கள் உயிர், பொருள் ஆகிய அனைத்தையும் இழந்து நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டார்கள். இப்படி தியாகங்கள் செய்த முஸ்லிம்கள் குறித்து தற்போது தவறான கருத்துகளை ஒரு சக்தி பரப்பி வருகிறது. நாட்டின் மூவர்ண கொடியை ஒரே நிறம் கொண்ட கொடியாக மாற்ற ஒரு கும்பல் துடிக்கிறது. அதற்காக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். நாட்டின் அரசிலமைப்பு சட்டத்தை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகையை சூழ்நிலையில் நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு.

ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்:

 

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை ஆற்றிய தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள், நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு என குறிப்பிட்டார். ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டுமானால், அரசியலமைப்புச் சட்டத்தை நாம் பாதுகாக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை என்ற மந்திரத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். இதுதான் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும்.

இந்தியாவில் வாழும் அனைவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அனைவரும் ஒற்றுமையுட வாழ வேண்டும். அந்த ஒற்றுமை தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். ஆனால், அந்த ஒற்றுமையை சீர்குலைக்க தற்போது சதி நடக்கிறது. அந்த சதியை நாம் முறியடிக்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சியை நாடு முழுவதும் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

மோடி மீது குற்றச்சாட்டு:

சர்வதேச அமைப்பான யூமன் ரைட்ஸ் வாட்ச் (Human Rights Watch) அண்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது அதில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி மொத்தம் 173 பொதுக்கூட்டங்களில் பங்கேற்றதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது. இப்படி பங்கேற்ற பொதுக்கூட்டங்களில் 110 பொதுக்கூட்டங்களில் முஸ்லிம்கள் குறித்து தவாறாக பேசியதாகவும் அந்த சர்வதேச அமைப்பு ஆதாரங்களுடன் எடுத்து கூறியுள்ளது. அந்தளவுக்கு முஸ்லிம்கள் மீது ஒரு கும்பல் விரோதம் கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.

திராவிட மாடல் ஆட்சி:

இத்தகையை சூழ்நீலையில், இந்தியாவில் உள்ள அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து செல்லும் சக்தி, திராவிட மாடல் ஆட்சிக்கு மட்டுமே உண்டு. திராவிட மாடல் ஆட்சி என்பது தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் ஆன ஆட்சி கிடையாது. இது உலகம் முழுவதும் பரவ வேண்டிய ஆட்சி முறையாகும். அனைத்து மக்களையும் இணைக்கும் சக்தி, திராவிட மாடல் ஆட்சிச்கு உண்டு. யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்ற தத்துவம் தான் திராவிட மாடல் ஆட்சியின் தத்துவமாகும்.

ஒன்றே குலம், ஒருவதே  தேவன் என்ற அழகிய சித்தாந்தம் தான் திராவிட மாடல் ஆட்சி மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுகிறது. மக்களை பிரிக்க ஒரு கும்பல் முயற்சி செய்யும்போது, திராவிட மாடல் ஆட்சியை மக்களை ஒருங்கிணைக்க முயற்சி செய்கிறது. எல்லோரும் சமம் என்ற தத்துவம் திராவிட மாடல் ஆட்சி எடுத்துக் கூறுகிறது.

இத்தகைய சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை தமிழகத்தில் செய்துவரும் முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை நாம் பாராட்ட வேண்டும். அவரது எண்ணங்களை இந்தியா முழுவதும் கொண்டு சென்று சேர்க்கும் பொறுப்பு .யூ.முஸ்லிம் லீக் தொண்டர்களுக்கு உண்டு. திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் பரப்ப இந்த விழாவில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தியாகிகளுக்கு விருது:

நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்தவர்களுக்கும் வீர தீர செயல்களை செய்பவர்களுக்கும் ஒன்றிய, மாநில அரசுகளின் சார்பில் சுதந்திர தின விழாவில் விருது வழங்கி கவுரவம் அளிக்கப்படுகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் செய்யும் இந்த அற்புதமான பழக்கத்தை இனி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் செய்ய வேண்டும் என நாம் விரும்புகிறோம். நாட்டின் விடுதலைக்காக தியாகம் செய்த முஸ்லிம் தியாகிகளை கவுரவித்து இனி ஒவ்வொரு ஆண்டும், .யூ.முஸ்லிம் லீக் சார்பில் விருது வழங்கப்படும். தியாகம் செய்தவர்கள் உயிரோடு இருந்தால், அவர்களை அழைத்து இந்த விருது வழங்கப்படும். அப்படி இல்லையெனில், அவர்களின் வாரிசுகளை அழைத்து விருது வழங்கி கவுரவிக்கப்படும். நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தவர்களை கண்ணிப்படுத்த வேண்டியது நமது கடமை. அந்த வகையில் இனி ஒவ்வொரு ஆண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு விருது வழங்கப்படும் .

இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.

விழாவில் தலைமை நிலையச் செயலாளர் கே.எம்.நிஜாமுத்தீன் நன்றி கூறினார். .யூ.முஸ்லிம் லீக் பாடகர் கவிஞர் .ஷேக் மதார், துஆ ஓத, விழா இனியதாக முடிந்தது.

- சிறப்புச் செய்தியாளர்: எஸ்..அப்துல் அஜீஸ்

No comments: